செய்திகள்
பிரேமலதா

தமிழை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக: பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு

Published On 2019-09-30 05:08 GMT   |   Update On 2019-09-30 05:08 GMT
இளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். தி.மு.க தமிழை வைத்து அரசியல் செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் தே.மு.தி.க  சார்பாக கட்சியின் தொடக்க ஆண்டுவிழா, விஜயகாந்த் பிறந்தநாள்விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,

தமிழ்மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மொழியை வைத்து கட்சியையும், குடும்பத்தையும் வளர்த்து வருகிறார்கள். தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். இளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியும். கொடைக்கானலில் அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள உணவகங்களில் பணியாற்றி வந்த 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். தமிழக அரசின் ஆதரவோடு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவும் ,வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு தே.மு.தி.க பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News