ஆட்டோமொபைல்
கவாசகி வெர்சிஸ் 650

கவாசகி வெர்சிஸ் 650 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-08-12 08:57 GMT   |   Update On 2020-08-12 08:57 GMT
கவாசகி நிறுவனத்தின் புதிய வெர்சிஸ் 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கவாசகி நிறுவனம் தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான வெர்சிஸ் 650 மாடலை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து உள்ளது. புதிய பிஎஸ்6 வெர்சிஸ் 650 மாடல் விலை ரூ. 6,79,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பழைய மாடல் விலையை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65.7 பிஹெச்பி பவர், 61 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பிஎஸ்4 மாடல் என்ஜின் 67.4 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.



என்ஜின் மட்டுமின்றி புதிய மோட்டார்சைக்கிள் பெயின்ட்டிங் மாற்றப்பட்டு மேம்பட்ட தோற்றம் கொண்டிருக்கிறது. தற்சமயம் வெர்சிஸ் 650 பிஎஸ்6 மாடல் கேன்டி லைம் கிரீன் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதில் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரீன் மற்றும் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்6 வெர்சிஸ் மாடலிலும் ட்வின் பாட் ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார், 21 லிட்டர் ஃபியூயல் டேன்க், ஸ்டெப்-அப் சீட் மற்றும் அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News