செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா சூழ்நிலை எதிரொலி : ஜி-7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பயணம் ரத்து

Published On 2021-05-12 01:05 GMT   |   Update On 2021-05-12 01:05 GMT
இந்தியாவில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக, ஜி-7 மாநாட்டில் நேரடியாக கலந்துக்கொள்ளும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 13 தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருந்த ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி.

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவதாக இருந்தது. தற்போது இங்கிலாந்து செல்ல முடியாதநிலை உள்ளதால், காணொலி காட்சியின் வாயிலாக ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் இக்கிலாந்து பயணத்தில் Quad நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மீட்டிங்கும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பிடனை மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மோடியின் இங்கிலாந்து பயணம் ரத்தாகி உள்ளதால் அந்த மீட்டிங்கிலும் மோடி கலந்து கொள்ள மாட்டார். முன்னதால ஜி-7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News