செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

‘ரெம்டெசிவிர்’ மருந்தை தேவை இல்லாமல் பரிந்துரை செய்வோர் மீது நடவடிக்கை - புதுவை கவர்னர் தமிழிசை எச்சரிக்கை

Published On 2021-04-30 08:36 GMT   |   Update On 2021-04-30 08:36 GMT
ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது.

ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்காக எல்லா மக்களையும் அலைக்கழிக்க வேண்டாம்.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழகத்தின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். இது மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனை.

புதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசாங்கம் மூலமாக மருத்து வழங்கப்படுகிறது.


தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத்துறையின் மூலம் கண்காணிப்பும், நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கிவரச்சொல்லி அலைக்கழிக்க கூடாது. மேலும் அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பது மருத்துவ தணிக்கை குழு மூலம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News