உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்ட பா.ஜ.க.வினர் 60 பேர் மீது வழக்கு

Published On 2022-01-12 05:23 GMT   |   Update On 2022-01-12 05:23 GMT
சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் பா.ஜ.க. கொடி கம்பத்தை நட்ட போலீசார்  அத்து மீறி நடந்து கொண்டதாக கூறியும், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு குறைபாடு  ஏற்பட்டதை கண்டித்தும் பா.ஜ.க. சார்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியல்  ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய  அன்னதானப்பட்டி   போலீசார்   சுமார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வாழப்பாடி பஸ் நிலையம் அருகில்  நடந்த    ஆர்ப்பாட்டத்தில் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீர் மறியலில் ஈடுபட்டதோடு போலீஸ் அதிகாரிகளையும்    முற்றுகையிட்டனர்.  அப்போது போலீசார்  மற்றும் பா.ஜ.கவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இதையடுத்து கொரோனா காலத்தில் பா.ஜனதாவினர்   சமூக    இடைவெளியின்றி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும்,  பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு   ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாகவும்  32  பேர் மீது வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
Tags:    

Similar News