லைஃப்ஸ்டைல்
மொச்சைப் பருப்பு சாதம்

நார்ச்சத்து நிறைந்த மொச்சைப் பருப்பு சாதம்

Published On 2020-08-04 10:38 GMT   |   Update On 2020-08-04 10:38 GMT
புரதச் சத்து மற்றும் வைட்டமின்கள் (பருப்பு), நார்ச்சத்து (மொச்சை) ஆகியவை கலந்துள்ள சரிவிகித உணவு இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்,
பச்சை மொச்சை - அரை கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்.



செய்முறை:

அரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மொச்சையைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சூப்பரான மொச்சைப் பருப்பு சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News