செய்திகள்
சதமடித்த கருணரத்னே

கல்லெ டெஸ்ட் - கருணரத்னே சதத்தால் முதல் நாள் முடிவில் இலங்கை 267/3

Published On 2021-11-21 19:20 GMT   |   Update On 2021-11-21 19:20 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில இலங்கையின் நிசங்கா, கருணரத்னே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது.
கல்லெ:

வெஸ்ட் இண்டீஸ் அணி  இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு முதல் டெஸ்ட் கல்லெயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா, கேப்டன் கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர். பொறுப்புடன் ஆடிய நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். ஒஷாடா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  பொறுப்புடன் ஆடிய கருணரத்னே சதமடித்து அசத்தினார். டி சில்வா அரை சதமடித்தார்.

முதல் நாள் முடிவில் இலங்கை அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும், காப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News