பெண்கள் மருத்துவம்
கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு கைக்கொடுக்கும் உணவுகள்

கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு கைக்கொடுக்கும் உணவுகள்

Published On 2022-02-15 07:26 GMT   |   Update On 2022-02-15 07:26 GMT
சில உணவுகளை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இன்று பல கணவர் மனைவிக்கு இருக்கும் பிரச்சனை குழந்தை கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள்தான். அதனால்தான் சமீப காலமாக லாபம் காண்கின்றன கருத்தரித்தல் மையங்கள். சில உணவுகளை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

மாதுளை :

மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பது மட்டுமன்றி இரட்டிப்பாக்குகிறது. கருப்பையையும் வலுப்பெறச் செய்கிறது.

பால் மற்றும் பால் பொருட்கள் :

பாலில் உள்ள வைட்டமின்கள் ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பேரிட்சை :

பேரிட்சை பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் கர்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே உதவுகிறது. கருப்பையின் உறுதியை பாதுகாப்பது மட்டுமன்றி கரு நின்ற பிறகும் தக்க வைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு, சாத்துகுடி என சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இனப்பெருக்க செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும் என்பது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது.
Tags:    

Similar News