ஆன்மிகம்
இளையான்குடியில் மாசி களரி திருவிழா

இளையான்குடியில் மாசி களரி திருவிழா

Published On 2021-03-19 05:30 GMT   |   Update On 2021-03-19 05:30 GMT
இளையான்குடி அருகே மாசிகளரி திருவிழாவிற்கு பொதுமக்கள் காப்புக்கட்டி விரதமிருந்து மாசிகளரி அன்று சாமி பாரிவேட்டை நடத்தி அருளாசியுடன் குறிகேட்டல், அருள்வாக்கு பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் மாசிகளரி திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பொதுமக்கள் காப்புக்கட்டி விரதமிருந்து மாசிகளரி அன்று சாமி பாரிவேட்டை நடத்தி அருளாசியுடன் குறிகேட்டல், அருள்வாக்கு பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கருப்பணசாமி, வேடன், சோனையா, இருளப்பன், இருளாயி முனியசாமி, ராக்கச்சி ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோட்டையூர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் சர்பத், நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோட்டையூர் கிராம பொதுமக்களும், இளைஞர் அமைப்பினரும் இணைந்த விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News