செய்திகள்
சித்தரிப்பு படம்

காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு

Published On 2019-11-17 13:16 GMT   |   Update On 2019-11-17 13:16 GMT
ஜம்முவில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
ஜம்மு:

ஜம்முவில் உள்ள அக்னூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, பல்லான்வாலா என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர் என ஜம்முவில் இருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News