செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

சவுதியில் இஸ்ரேலி சினிமாவுக்கு கூடிய கூட்டம் என வைரலாகும் வீடியோ

Published On 2020-09-24 04:51 GMT   |   Update On 2020-09-24 04:51 GMT
சவுதி அரேபியாவில் இஸ்ரேலி சினிமாவுக்கு கூடிய கூட்டம் என கூறி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரபு நாடுகளுடன் இராஜாந்திர உறவு முறையை வளர்க்க இஸ்ரேல் துவங்கி உள்ளது. இந்நிலையில், பெரும் கூட்டத்தினர் கட்டிடத்தின் வெளியில் இருந்து உள்ளே செல்ல முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் இருப்பவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள திரையரங்கினுள் நுழைய முயன்றனர் என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த திரையரங்கில் இஸ்ரேலி சினிமா திரையிடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அதனுடன் வலம் வரும் தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ சவுதி அரேபியாவின் ஹாஃபர் அல்பட்டின் நகரில் உள்ள விற்பனையகத்திற்கு தள்ளுபடியில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் ஆகும்.

இதே வீடியோ பலர், தங்களது ட்விட்டரில் ஏப்ரல் 20, 2019 அன்று பதிவிட்டு, தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்பது போன்ற தலைப்புகளில் பகிரப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் வைரல் வீடியோவில் இருப்பது சவுதி அரேபியாவில் இஸ்ரேலி சினிமா பார்க்க கூடிய கூட்டம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News