செய்திகள்
ரெயில்

வஞ்சிபாளையம்-கவுகாத்தி பார்சல் ரெயில்ரத்து

Published On 2021-06-09 07:27 GMT   |   Update On 2021-06-09 07:27 GMT
கிலோவுக்கு ரூ.15 கட்டணம் என்பதால் தொழில் நிறுவனங்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து பாத்திரம், பனியன், நூல், முட்டை, மருந்து, உணவுப்பொருள், கூரியர் உள்ளிட்டவற்றை அனுப்பி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,000 டன் சரக்குகள் அனுப்பிவைக்கப்பட்டன.
திருப்பூர்:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சரக்குகளை குறைந்த செலவில் அனுப்பி வைக்க திருப்பூர் வஞ்சிபாளையம்-அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை ஜனவரி 30ந்தேதி தெற்கு ரெயில்வே தொடங்கியது.

கிலோவுக்கு ரூ.15 கட்டணம் என்பதால் தொழில் நிறுவனங்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து பாத்திரம், பனியன், நூல், முட்டை, மருந்து, உணவுப்பொருள், கூரியர் உள்ளிட்டவற்றை அனுப்பி வந்தனர்.கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,000டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.தற்போது அசாம் மற்றும் வட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் இரு வாரங்கள் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.இதனால் திருப்பூர் வஞ்சிபாளையம்-கவுகாத்தி இடையிலான பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான முன்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூன், ஜூலை மாதங்களுக்கான சரக்கு முன்பதிவு மற்றும் ரெயில் இயக்கத்தை தெற்கு ரெயில்வே நிறுத்தியுள்ளது. கோவை-டெல்லி மற்றும் ராஜ்கோட் இடையேயான பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News