ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-09-22 04:57 GMT   |   Update On 2021-09-22 08:01 GMT
திருப்பதி கோவிலில் இந்த முறையும் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருள்வார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடந்தது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த முறையும் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.

ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்குள் ஆன்லைனில் வழங்கப்படும். தேவஸ்தான வெப்சைட்டை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால் சர்வர் முடங்குகிறது. எனவே சர்வரை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சர்வர் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்குள் ஆன்-லைனில் வெளியிடப்படும்.

கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏழுமலையானின் தீவிர பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையான் குறித்து எழுதிய 4 ஆயிரம் கீர்த்தனைகளை தேவஸ்தானம் அச்சடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
Tags:    

Similar News