செய்திகள்
கிறிஸ் வோக்ஸ்

இலங்கை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: கிறிஸ் வோக்ஸ் 6 வருடத்திற்கு பின் இடம்பிடிப்பு

Published On 2021-06-13 09:50 GMT   |   Update On 2021-06-13 09:50 GMT
பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூன் 23-ந்தேதியும், 2-வது போட்டி ஜூன் 24-ந்தேதியும் கார்டிஃபில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் ஜூன் 26-ந்தேதி நடக்கிறது.

இதற்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. சாம் பில்லிங்ஸ், 5. ஜோஸ்ட் பட்லர், 6. சா்ம கர்ரன், 7. டாம் கர்ரன், 8. லியம் டாசன், 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டோன், 11. தாவித் மலான், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே, 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.


கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து டி20 அணிக்காக 2015-ம் ஆண்டு நம்பவர் மாதம் விளையாடியிருந்தார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம் பிடித்துள்ளார். ‘‘கிறிஸ் வோக்ஸ், டேவில் வில்லே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளதால், வலுவாக அணியை பெற்றுள்ளோம்’’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் இலங்கை தொடரிலும் இடம்பெறவில்லை.
Tags:    

Similar News