ஆட்டோமொபைல்
ஹோண்டா எஸ்யுவி இ ப்ரோடோடைப்

ஷாங்காய் ஆட்டோ விழாவில் புது ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்த ஹோண்டா

Published On 2021-04-21 08:44 GMT   |   Update On 2021-04-21 08:44 GMT
ஹோண்டா நிறுவனம் எஸ்யுவி இ ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வாக வெளியிட்டு இருக்கிறது.


ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கிராஸ்-ஒவர் கான்செப்ட் மாடலை 2021 ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் எஸ்யுவி இ ப்ரோடோடைப் என்றே அழைக்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் இ கான்செப்ட் மாடலை இதேபோன்றே காட்சிப்படுத்தி இருந்தது.

சமீபத்தில் ஹோண்டா ஹெச்ஆர்-வி ஹைப்ரிட் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்தது. புதிய எஸ்யுவி இ ப்ரோடோடைப் தோற்றத்தில் ஹெச்ஆர்வி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட ஹோண்டா லோகோ, சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.



இதன் பம்ப்பரில் எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன. இத்துடன் பெரிய வீல்கள், பின்புறம் அதிக எல்இடி ஸ்ட்ரிப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.

இதே நிகழ்வில் பிரீஸ் PHEV ப்ரோடோடைப், ஹோண்டாவின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஹோண்டாவின் மூன்றாம் தலைமுறை கனெக்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News