தொழில்நுட்பம்

இந்தியாவில் அதிவேக 4ஜி இங்கு மட்டுமே கிடைக்கிறதாம்

Published On 2019-03-29 04:28 GMT   |   Update On 2019-03-29 04:28 GMT
இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G



ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.




தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
Tags:    

Similar News