செய்திகள்
கவர்னர் பேபி ராணி மௌரியா

உத்தரகாண்ட் மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-22 17:23 GMT   |   Update On 2020-11-22 17:23 GMT
உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெராடூன்:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தினமும் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கவர்னர்கள் என பலரும் இலக்காகி வருகின்றனர்.

அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநில கவர்னரும் தற்போது இணைந்துள்ளார். உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி மௌரியாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த தகவலை கவர்னர் மௌரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் தற்போது வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News