ஆட்டோ டிப்ஸ்
சுசுகி ஸ்கூட்டர்

மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய சுசுகி

Published On 2022-01-11 08:45 GMT   |   Update On 2022-01-11 08:45 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் 60 லட்சம் யூனிட்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது. 60 லட்சத்து யூனிட் குருகிராம் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. 

'இந்தியாவில் சுசுகி களமிறங்கி இந்த ஆண்டுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் தட்டுப்பாடு போன்ற சிக்கலான சூழ்நிலைகளிலும் இந்த மைல்கல் எட்டியதில் பெருமை கொள்கிறோம்,' என சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக இயக்குனர் சடோஷி யுச்சிடா தெரிவித்தார்.  



சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், அக்சஸ் 125, ஜிக்சர் 250, ஜிக்சர் 150, பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் அவெனிஸ் 125 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஐந்தாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தது.

முன்னதாக சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி அவெனிஸ் விலை ரூ. 86,700, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அவெனிஸ் மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News