ஆன்மிகம்
நம்மாழ்வார்

வித்தியாசமான நம்மாழ்வார்

Published On 2021-05-03 09:05 GMT   |   Update On 2021-05-03 09:05 GMT
பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆழ்வார் திருநகரி திருத்தலம்.

இங்கு ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி என்பதாகும். இந்த திருத்தலம் ‘திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள திருவரங்கத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்பார்கள். அதேபோல் ஆழ்வார் திருநகரி ‘பரமபதம்’ என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த வடிவிலான நம்மாழ்வாரை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Tags:    

Similar News