செய்திகள்
மலேசியா உள்துறை மந்திரி முஹைதீன் யாசின்

மலேசியாவில் பயங்கரவாத வழக்கில் 519 பேர் கைது- மந்திரி தகவல்

Published On 2019-08-26 09:58 GMT   |   Update On 2019-08-26 09:58 GMT
மலேசியாவில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 519 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கோலாலம்பூர்:

மலேசியாவில் இந்த ஜூலை மாதம் வரை பயங்கரவாத செயல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 519 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என மொத்தம் 519 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசியா உள்துறை மந்திரி முஹைதீன் யாசின் இன்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கண்டறியப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் குற்றவாளிகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

Tags:    

Similar News