வழிபாடு
கோவில்களில் திருவாதிரை திருவிழா

கோவில்களில் திருவாதிரை திருவிழா

Published On 2021-12-22 05:24 GMT   |   Update On 2021-12-22 05:24 GMT
ஆறுமுகநேரி விநாயகர் கோவிலில் சைவ வேளாளர் சங்க சபையின் நடராஜர் சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை நடந்தது.
ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, காலசந்தி பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆனந்த நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், நால்வர் மூர்த்தியுடன் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

ஆறுமுகநேரி விநாயகர் கோவிலில் சைவ வேளாளர் சங்க சபையின் சார்பில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை நடந்தது.

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் தேவார பக்த ஜனசபையின் சார்பில், திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம், நடராஜர் சப்பர பவனி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News