தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் ஸ்மார்ட்போன்

இணையத்தில் லீக் ஆன புது சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்

Published On 2021-12-01 11:31 GMT   |   Update On 2021-12-01 11:31 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடல் புது ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


சாம்சங் கேலக்ஸி எஸ்21 பேன் எடிஷன் (எப்.இ.) அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் புது ரெண்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்21 எப்.இ. நான்கு நிறங்களில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்படலாம். 



அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.41 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1 வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்பி கேமரா, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News