தொழில்நுட்பம்
சோனி பிஎஸ் 5

பிஎஸ் 5 விற்பனையில் மாஸ் காட்டும் சோனி

Published On 2021-02-05 04:28 GMT   |   Update On 2021-02-05 04:28 GMT
சோனி நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் டிசம்பர் 31, 2020 வரை காலாண்டிற்கான விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி சோனி நிறுவனம் 35,920 கோடி ஜப்பானிய யென்களை லாபமாக ஈட்டியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிஎஸ் 5 விற்பனை 45 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.

இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கு 76 லட்சம் யூனிட்கள் என்றும், இதனை எட்ட சோனி முயற்சித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. பிஎஸ் 5 யூனிட்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை அதிக யூனிட்களை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சோனி தெரிவித்து உள்ளது.

டிசம்பர் இறுதி வரை மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர் மேன் - மைல்ஸ் மொரால்ஸ் கேம் சுமார் 41 லட்சம் யூனிட்கள் விற்பனையானகி இருக்கிறது. டிசம்பர் வரைலியான காலக்கட்டத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் பிரிவு விற்பனை 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.  

இதே காலக்கட்டத்தில் தான் சோனி தனது புதிய கேமிங் கன்சோல் பிஎஸ் 5 விற்பனையை துவங்கியது. இதன் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
Tags:    

Similar News