ஆட்டோமொபைல்
டாடா டியாகோ

தொடர் சோதனையில் டாடா சிஎன்ஜி கார்கள்

Published On 2021-03-01 09:15 GMT   |   Update On 2021-03-01 09:15 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகின்றன.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி மாடல்களை இந்திய சந்தையில் சோதனை செய்கிறது. முன்னதாக இரு மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இரண்டு புதிய கார்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை செய்யப்படுகிறது.

இரண்டு புது மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புது சிஎன்ஜி வேரியண்ட் டியாகோ மற்றும் டிகோர் பேஸ்லிப்ட் மாடல்களை தழுவி உருவாகி இருக்கின்றன. இந்த வேரியண்ட் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது.

ஸ்பை படங்களின்படி டியாகோ சிஎன்ஜி வேரியண்ட் மிட்-ரேன்ஜ் மாடல் என தெரியவந்துள்ளது. இதில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. டிகோர் மாடல் பேஸ் வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. இது ஸ்டீல் ரிம்களை கொண்டுள்ளது.



மேம்பட்ட பிஎஸ்6 ரக டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் கிரில், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பாக் லேம்ப்கள், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டெயில் லைட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News