செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் 3 நாட்களுக்கு கூடுதலாக 15 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

Published On 2021-06-16 09:09 GMT   |   Update On 2021-06-16 09:09 GMT
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
திருப்பதி:

ஆந்திராவில் கொரோனா 2-வது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பதியில் காலை 6 மணி முதல் பகல் 12 வரை மட்டுமே கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்தும் 12 மணி வரை இயக்கப்பட்டன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஆந்திர அரசு பல்வேறு தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகின்றன.

இதனால் திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 15,000 வரை கூடியுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரும் 22, 23, 24, ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ. 300 ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News