செய்திகள்
மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு- தண்டவாளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

Published On 2020-10-05 03:05 GMT   |   Update On 2020-10-05 03:05 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் தொடர்கிறது.
சண்டிகர்:

மத்திய அரசின்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் காலவரையற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிராக்டர் பேரணியை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பிலும் தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று தேவிதாஸ்புரத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராடினர். தண்டவாளத்திலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தனர். 

அக்டோபர் 8ம் தேதி வரை ரெயில் மறியல் போராட்டத்தை நீட்டித்திருப்பதாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி செயலாளர் சுக்பீந்தர் சிங் தெரிவித்தார்.
Tags:    

Similar News