செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

கோவில்பட்டி கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

Published On 2019-10-17 13:53 GMT   |   Update On 2019-10-17 13:53 GMT
கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருடன் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கோவிலில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெல்லை இந்து அறநிளைலத்துறை இணை ஆனையர் பரஞ்ஜோதி தலைமையில் ஹரிஹர பட்டர் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து ஓ.பன்னீசெல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரசாதங்கள் வழங்கபட்டது. 

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு பரிவட்டங்கள் கட்டபட்டது. பின்னர் அவர்கள் கோவில் அரங்கில் தரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில் முன்பு 93 அடி உயரத்தில் முருகன் சிலை வைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அதற்கான வரைபடத்தை துணை முதல்வரிம் காண்பித்தார். இதனை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் சிலை அமைக்கபடவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் கற்சிலையாக வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் அதற்குறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக அவர் கூறினார். இதையடுத்து அவருக்கு தொகுதி மக்கள் சார்பில் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News