ஆன்மிகம்
முருகன்

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூச வரலாறு

Published On 2021-01-28 05:09 GMT   |   Update On 2021-01-28 05:09 GMT
உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டாலும், பழனியில் நடைபெறும் திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மூண்ட போரில், அசுரர்களை அழிக்க முடியாமல் திணறிய தேவர்கள் சிவபெருமானின் அருளை நாடினர். முக்கண் நாயகனை நேரில் சந்தித்து தேவர்கள் முறையிட்டதால், எம்பெருமான் தேவர்களை காக்க தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை உருவாக்கினார். அவ்வாறு வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. அதுவே முருகன் அவதாரம் ஆகும்.

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் ஆறுமுகத்துடன் முருகனாக அவதரித்தார். ஞானப்பழம் கிடைக்காததால் கோபமுற்ற முருகன் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் குடியேறினார். பின்னர் முருகப்பெருமான் சூரர்களை அழிப்பதற்காக சிவனில் பாதியான சக்தியுடையாள், முருகப்பெருமானுக்கு ஞானவேலை தந்தருளியது 'தைப்பூச' தினத்தன்று என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டாலும், பழனியில் நடைபெறும் திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
Tags:    

Similar News