உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் போலீசார்

Published On 2022-01-24 10:03 GMT   |   Update On 2022-01-24 10:03 GMT
கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, குழந்தை திருமணம், கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, குழந்தை திருமணம், போக்சோ சட்டம் சி.சி.டி.வி. காமிரா மற்றும் கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களையும் தங்களின் குடும்பத்தின் நலனையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும், 

தங்களின் வீடுகளிலும் தெருக்களிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவதன் மூலம் குற்றச்செயல்கள் நடக்காமலும், நடைபெற்ற குற்றச்செயலில் குற்றவாளியை எளிதில் அடையாளம் காணவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்கள் சி.சி.டி.வி காமிரா பொருத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Tags:    

Similar News