இந்தியா
டிகே சிவக்குமார்

காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம்: டி.கே.சிவக்குமார்

Published On 2022-01-22 03:12 GMT   |   Update On 2022-01-22 03:12 GMT
கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னாள் மேல்-சபை உறுப்பினரான காந்தராஜ் நேற்று காலையில், பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்திருக்கிறார். இதுபோல், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் பாதயாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 85 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது. பாதயாத்திரையை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. தற்போது மக்களிடம் தவறான தகவல்களை பரப்ப போலீசாருக்கு கொரோனா பாதிப்பு வந்ததாக கூறி வருகின்றனர். பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் எந்த ஒரு போலீசாரும் இல்லை. போலீசார் பாதுகாப்பு பணியிலேயே ஈடுபடாத போது, அவர்களுக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்படும்’’ என்றார்.
Tags:    

Similar News