செய்திகள்
வீடியோ ஸ்கிரீன்ஷாட்

தமிழக கோயில் இடிக்கப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-09-15 09:27 GMT   |   Update On 2021-09-15 09:27 GMT
தமிழ் நாட்டில் உள்ள கோயில் இடிக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் வைரலாகி வருகின்றன.


கோயில் கட்டிடம் இடிக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தலிபான் ஆளும் தமிழகத்தில் மற்றொரு இந்து கோயில் இடிக்கப்பட்டது. வழக்கம் போல் எந்த எதிர்ப்பும் இல்லை. தொடர்ந்து உறங்குங்கள்," என்பது போன்ற தலைப்பில் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது தமிழ் நாட்டில் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது. உண்மையில் இந்த வீடியோ கர்நாடக மாநிலத்தின் நஞ்சிகுட் பகுதியில் உள்ள மகாதேவம்மா கோயில் இடிக்கப்படும் போது எடுக்கப்பட்டது ஆகும்.

வலைதளங்களிலும் பலர், இந்த வீடியோ கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டது என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் வைரல் வீடியோ தமிழ் நாட்டில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

Tags:    

Similar News