செய்திகள்
போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு

Published On 2021-06-11 10:03 GMT   |   Update On 2021-06-11 14:13 GMT
புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைத்து காய்ச்சல் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம், புதுப்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதித்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிராமம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளித்தும் மருத்துவமுகாம் அமைத்தும் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கிராமம் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் வெளியே வராதபடி போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் திருப்பூர் விவேகானந்தா நகர் பகுதியில் 47 பேர் கொரோன  தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் வெளியேறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News