செய்திகள்
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வாலிபரையும் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளையும் காணலாம்

கோட்டாரில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2021-10-31 07:29 GMT   |   Update On 2021-10-31 07:29 GMT
கோட்டாரில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் நகரில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில், கன்னியாகுமரி குளச்சல் தக்கலை சப்டிவிசனுக்குட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருக்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை செய்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக தற்போது கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை சற்று குறைந்துள்ளது .

இந்த நிலையில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோதை கிராமம் பகுதியில் ரோந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. மோட்டார்சைக்கிளில் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சாமிதோப்பு அருகே காமராஜர் புரத்தை சேர்ந்த அரவிந்த் வயது 23 என்பது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் அரவிந்திற்கும் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மதுரையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கொரியரில் அனுப்பி அந்த கஞ்சா பொட்டலங்களை இங்குள்ளவர்களுக்கு சப்ளை செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து அரவிந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


Tags:    

Similar News