செய்திகள்
பாராளுமன்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட கூடும்?

Published On 2020-11-17 00:15 GMT   |   Update On 2020-11-17 00:15 GMT
கொரோனா வைரசின் பாதிப்புகளால் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படும் என மூத்த மந்திரிகள் தரப்பில் பேசப்படுகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பருவகால கூட்டத்தொடர் காலதாமதமுடன் செப்டம்பரில் கூடியபொழுது, இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு நடந்த கட்டாய பரிசோதனையில் 25 எம்.பி.க்களுக்கு (மக்களவை-17, மாநிலங்களவை-8) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், பாதிப்பு இல்லாத நபர்களுக்கும் நாளடைவில் தொற்றுகள் ஏற்பட்டன.  அவையில் 200 எம்.பி.க்கள் 65 வயது கடந்த முதியவர்களாக உள்ளனர். இது கொரோனா வைரசின் பாதிப்பு அவர்களிடையே தீவிரமடைய ஏதுவாக உள்ளது.

தலைநகர் டெல்லியில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு நடப்பு சூழலில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாமல், பாராளுமன்றத்தின் காலவரையற்ற ஒத்திவைப்பு தொடரக் கூடும் என மூத்த மத்திய மந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் 6 மாதங்களுக்குள் கூட வேண்டும் என்ற அரசியல் சாசன நடைமுறையின்படி, கூட்டத்தொடர் நடத்த வேண்டிய அவசரம் ஏதுமில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்பொழுது, பாராளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என பெயர் வெளியிட விருப்பமில்லாத மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News