செய்திகள்
நியூசிலாந்து அணி வீரர்கள்

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு - வெஸ்ட் இண்டீஸ் ‘பாலோஆன்’

Published On 2020-12-05 06:46 GMT   |   Update On 2020-12-05 06:46 GMT
ஹேமில்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஹேமில்டன்:

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்லெர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது.

நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெஸ்ட் இண்டீஸ் 60 வது ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 35 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. பிளாக்வுட் ஒருவர் மட்டுமே தாக்குபிடித்து ஆடினார்.

இதனால் நியூசிலாந்து இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.

இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

Tags:    

Similar News