செய்திகள்
விராட் கோலி

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி

Published On 2021-04-22 20:15 GMT   |   Update On 2021-04-22 20:15 GMT
தேவ்தத் படிக்கல், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது. சிவம் துபே 46 ரன்னும், ராகுல் டெவாட்டியா 40 ரன்னும் எடுத்தனர்.

பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர் படிக்கல், விராட் கோலி.

நேற்றை ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மொத்தம் 6,021 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், 3வது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், 4வது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், 5வது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர். 
Tags:    

Similar News