செய்திகள்
முத்தரசன்

முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது: முத்தரசன்

Published On 2020-10-15 15:00 GMT   |   Update On 2020-10-15 15:00 GMT
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு அமித் ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது.

வரி கட்டாமல் ரஜினி மேல்முறையீடு செய்வது ஏதும் சலுகை கிடைக்குமா? என்கிற எதிர்ப்பார்பில் அவர் செய்யலாம். ஒருவேளை ரஜினிக்கும் அதிமுக-விற்கும் ரகசிய உறவு இருக்கலாம். அதன் மூலம் அவர் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

அத்துடன் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது இரண்டாக இருக்க வேண்டுமா? என்பதையும், அதிமுக-விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா? என்பதையும் பாஜக-தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும், 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய அவர், ‘‘முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது’’ என்றார்.
Tags:    

Similar News