ஆன்மிகம்
முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

Published On 2021-08-26 05:04 GMT   |   Update On 2021-08-26 05:04 GMT
இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தின் கீழத்தெரு கிராம மக்கள் மழை வேண்டி முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா கொண்டாடினார்கள்.
இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தின் கீழத்தெரு கிராம மக்கள் மழை வேண்டி முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா கொண்டாடினார்கள்.

ஒயிலாட்ட குழுவினர், கரகம் எடுப்போர், பெண்கள் காப்பு கட்டி ஒரு வார காலம் விரதமிருந்து முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வளர்த்து வழிபாடுகள் செய்தனர். பூசாரிகள் காரிமுத்து, சுப்பிரமணி ஆகியோர் கரகம் எடுத்து ஆடினர். ஒயிலாட்ட வாத்தியார்கள் ராமசாமி, கந்தன், பஞ்சவர்ணம் ஆகியோர் ஒயிலாட்ட குழுவினருக்கு பாடல்கள் பாடி பயிற்றுவித்து இளைஞர்களை ஒயிலாட்டம் ஆடவைத்தனர்.

முத்துமாரியம்மன் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News