ஆன்மிகம்
திருநள்ளாறு பேட்டையில் சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

திருநள்ளாறு பேட்டையில் சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2021-02-04 06:48 GMT   |   Update On 2021-02-04 06:48 GMT
காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரபகவான் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரபகவான் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து, கடந்த 1-ந் தேதி குடமுழுக்கிற்கான விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News