செய்திகள்
கோப்புபடம்.

மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு - குடிமங்கலத்தில் போராட்டம் நடத்த பா.ஜ.க. முடிவு

Published On 2021-10-10 10:01 GMT   |   Update On 2021-10-10 10:01 GMT
குடிமங்கலம் ஒன்றியத்தில்” ஜல் ஜீவன் “திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
குடிமங்கலம்:

மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதை கண்டித்து பா.ஜ.க. குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குடிமங்கலம் ஒன்றியத்தில்" ஜல் ஜீவன் "திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தவறுகளை சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல் படுகின்றனர். இதேபோல் கிராம  இணைப்பு ரோடு பணிகளும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசு நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
Tags:    

Similar News