ஆன்மிகம்
பெருமாள்

புரட்டாசி மாதத்திற்கும் விரதத்திற்கும் உள்ள மகிமைகள்...

Published On 2019-09-24 06:22 GMT   |   Update On 2019-09-24 06:22 GMT
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.
தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் புரட்டாசி. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் இந்த புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.

பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒவ்வொரு சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை மேற்கொள்ள் முடியாதவர்கள் புரட்டசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து வழிபடுவதோடு, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிட்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக பார்க்கப்படுகின்றது.

அதே போல், சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார். 
Tags:    

Similar News