உள்ளூர் செய்திகள்
தக்காளி

மாட்டுத்தாவனி காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ தொட்டது

Published On 2021-12-04 11:33 GMT   |   Update On 2021-12-04 11:33 GMT
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
மதுரை:

மதுரை மாட்டுதாவனி காய்கறி சந்தைக்கு கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகம் இருக்கும். பெருமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளதால், அவைகளின் விலை பலமடங்கு உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 100 ரூபாயும், சில்லரைக்கு 120 ரூபாயும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாய்க்கும் சில்லரை விலையில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் மொத்த விலையில் 60 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ அவரைக்காய் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விலையில் 100 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ கத்தரிக்காய் மொத்த விலையில் 120 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 140 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விலையில் 85 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ கேரட் மொத்த விலையில் 80 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பீட்ரூட் மொத்த விலையில் 60 ரூபாய்க்கும் சில்லரை விலையில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Tags:    

Similar News