ஆன்மிகம்
திருக்காமீஸ்வரர் கோவில்

திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வழிபட வேண்டிய கோவில்

Published On 2020-07-30 05:45 GMT   |   Update On 2020-07-30 06:09 GMT
திருக்காமீஸ்வரர் கோவிலில் திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், தொழிலில் அபிவிருத்தி இல்லாதவர்களும் கலந்து கொண்டு கோபூஜையை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
புதுவையில் தென்மேற்கு 10  கி.மீ தொலைவில் வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. வேண்டுதல் நிறைவேற கோபூஜை கோயிலின் தென் மேற்கு பகுதியில் கோசாலை உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் உள்ளன.

 இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாலை 6 மணி முதல் 7.30 வரை கோ பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில், திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், தொழிலில் அபிவிருத்தி இல்லாதவர்களும் கலந்து கொண்டு இந்த கோபூஜையை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து  கொள்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் மணமக்களுடன் இங்கு கோ பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆண்கள் தொழில் அபிவிருத்திக்காக கோபூஜை செய்து பலன் அடைந்து வருவதை காண முடிகிறது. 
Tags:    

Similar News