தொழில்நுட்பம்
அமேசான் கேமிங்

கேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்

Published On 2020-04-05 05:45 GMT   |   Update On 2020-04-04 11:51 GMT
அமேசான் நிறுவனம் கேம் ஸ்டிரீமிங் சேவையினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேமிங் துறை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்சமயம் அமேசான் நிறுவனமும் கேமிங் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. அமேசான் கேம் ஸ்டிரீமிங் சேவையின் முதல் கேம் அறிவியல் புனைகதை சார்ந்து உருவாகி இருக்கிறது. இந்த கேம் குரூசிபில் என அழைக்கப்படுகிறது. 

குரூசிபில் மட்டுமின்றி நியூ வொர்ல்டு பெயரில் மல்டி பிளேயர் கேம் ஒன்றை வெளியிடவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. குரூசிபில் கேமினை ரெலென்ட்லெஸ் எனும் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வருகிறது. அமேசான் நீண்ட கால முதலீடு காரணமாக இது சாத்தியமாகி இருக்கிறது.



நியூ வொர்ல்டு கேமினை ஐர்வைன் எனும் கேம் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. வீடியோ கேமிங் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை கொண்டு வர அமேசான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமேசான் புதிய திட்டம் மூலம் கூகுள் ஸ்டேடியா சேவைக்கு போட்டியாக அமைகிறது. 

இதற்கென பிராஜக்ட் டெம்போ எனும் சேவையினை உருவாக்கி வருகிறது. இத்துடன் கேம் பிராசஸிங் என்ஜின் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. லம்பர்யார்டு என அழைக்கப்படும் இந்த என்ஜின் அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் பவர் மூலம் இயங்குகிறது.

இத்துடன் இன்டராக்டிவ் கேம்களில் பயனர் மற்ற கேமர்களுடன் உரையாட ட்விட்ச் எனும் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News