செய்திகள்
எண்ணெய்

நடப்பாண்டில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரிப்பு

Published On 2021-08-02 03:22 GMT   |   Update On 2021-08-02 03:22 GMT
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரி 45 சதவீதத்திலிருந்து 37.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:

மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது:-

கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலை எண்ணெய் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தை விட கடந்த ஜூலை மாதத்தில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல கடுகு எண்ணெய் விலை 39.03 சதவீதமும், வனஸ்பதி 46.1 சதவீதமும், சோயா எண்ணெய் 48.57 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 51.62 சதவீதமும், பாமாயில் 44.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்ட போதிலும் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்தபாடில்லை. விலையைக் குறைக்க கச்சா பாமாயில் மீதான வரி கடந்த ஜூலை 31 முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா பாமாயில் மீதான பயன்பாட்டிற்கான வரி விகிதத்தை 30.25 சதவீதமாக குறைத்துள்ளது. முன்பு 35.75 சதவீதமாக இருந்தது. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதானவரி 45 சதவீதத்திலிருந்து 37.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பருப்பு வகைகளில் இருப்பு வைக்க உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பருப்பு வகைகளின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Tags:    

Similar News