தொழில்நுட்பம்
கேலக்ஸி ஃபோல்டு

64 எம்பி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி ஃபோல்டு 2

Published On 2020-04-29 05:42 GMT   |   Update On 2020-04-29 05:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் மீதான எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. 

அந்த வகையில், இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஃபோல்டு 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் சற்றே பெரிய திரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் கேமரா சென்சார்களும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.



அதன்படி கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் பிரைமரி சென்சார் 16 எம்பியில் இருந்து 64 எம்பி ஆக மாற்றப்படுகிறது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இவற்றில் டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி இருக்கும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என இருவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் இரண்டாவது திரை சற்றே பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது. தற்போதைய தகவல் இதனை முற்றிலும் மறுக்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது.
Tags:    

Similar News