ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2018 பிஎம்டபுள்யூ எக்ஸ்3 அறிமுகம்

Published On 2018-04-19 11:34 GMT   |   Update On 2018-04-19 11:34 GMT
பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2018 எக்ஸ்3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்தியாவில் 2018 எக்ஸ்3 மாடலினை அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் வடிவமைப்புகளுடன், மேம்படுத்தப்பட்ட கிரிள் உள்ளிட்டவற்றுடன் புதிய காரின் வெளிப்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்3 மாடல் அடுத்த தலைமுறை பவேரியன் எஸ்யுவி என பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2003-ம் ஆண்டு பிஎம்டபுள்யூ எக்ஸ்3 முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க சுமார் 15 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரீமியம் மற்றும் மிட்-செக்மென்ட் எஸ்யுவி பிரிவில் இந்தியாவில் எக்ஸ்3 நன்கு அறியப்படும் வெற்றிகர மாடலாக இருக்கிறது.

புதிய எக்ஸ்3 மாடலில் 18 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சம் 21 இன்ச் வரையிலான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. பின்புற ரூஃப் ஸ்பாயிலர் மற்றும் புதிய விங்ஸ், ட்வின் டெயில்பைப்கள் மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறத்தில் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு சமீபத்திய பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த திரையை ரோட்டரி ஐடிரைவ் கன்ட்ரோலர், டச் ஸ்கிரீன் அல்லது குரல் மூலமாகவும் இயக்க முடியும். வீல்பேஸ் 60மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் உள்புறம் அதிக இடவசதி கொண்டுள்ளது. தரமும் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் 7-சீரிஸ் மாடல்களுக்கு அளவுக்கு இணையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மாடல் இருவித டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளது. ஒன்று 1995சிசி 4-சிலிண்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 190 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்கியூ மற்றும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதனால் இந்த கார் வெறும் எட்டு நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்பதோடு அதிகபட்சம் மணிக்கு 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

இந்தியாவில் பிஎம்டபுள்யூ 2018 எக்ஸ்3 xDrive 20d Expedition மாடல் விலை ரூ.49.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் பிஎம்டபுள்யூ 2018 எக்ஸ்3 xDrive 20d Luxury Line மாடல் விலை ரூ.56.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News