செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் கிராம விருந்தில் கலந்துகொண்ட 93 பேருக்கு கொரோனா

Published On 2021-04-13 23:16 GMT   |   Update On 2021-04-13 23:16 GMT
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில், பொடா கிராமத்தில் 700 பேர் வசிக்கிறார்கள். தற்போது இந்த கிராமமே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில், பொடா கிராமத்தில் 700 பேர் வசிக்கிறார்கள். தற்போது இந்த கிராமமே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏனெனில் இங்கு பரிசோதனை செய்ததில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

பக்கத்து கிராமத்தை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்ததையடுத்து அவரது இறுதிச் சடங்கு மற்றும் விருந்தில் இந்த கிராமத்தினர் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் கிராமத்தை சேர்ந்த அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News