செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-11-04 04:22 GMT   |   Update On 2019-11-04 04:22 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை:

தொடர் மழை மற்றும் பருவ நிலை மாறுபாடு காரணமாக மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 150-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 119 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்து உள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தனி வார்டில் 32 பேருக்கு மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறும்போது, இது மழைக்காலம் என்பதால் காய்ச்சலின் பாதிப்பு அதிகம் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்காக 119 பேரும், டெங்கு காய்ச்சலுக்காக 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை பயப்படும் வகையில் இல்லை.

பொதுமக்களுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், உங்களில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடி யாக அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என்பதுதான். டெங்கு காய்ச்சலின் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால் நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலும் என்றார்.

Tags:    

Similar News