வழிபாடு
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மருத்துவாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

Published On 2022-02-19 08:59 GMT   |   Update On 2022-02-19 08:59 GMT
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த இந்திர பெருவிழாவையொட்டி மருத்துவாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் பிரசித்தி பெற்ற திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் தேவர்களையும், மக்களையும் இம்சை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து சிவபெருமானிடம் அவர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து சிவன் தனது ஐந்தாவது முகமான அகோர முகத்தில் இருந்து மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஒளி பிழம்பாக காட்சி அளித்தார்.

இதனைக்கண்டு அஞ்சிய அசுரன் அவரிடம் சரணாகதி அடைந்தார். அப்போது அசுரனின் வேண்டுகோளை ஏற்று, மிகவும் சக்திவாய்ந்த அகோரமூர்த்தி திருவெண்காடு கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். தற்போது கடந்த 13-ந்தேதி இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் 5-வது நாள் நிகழ்ச்சியாக மருத்துவாசூரனை சம்கார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அகோரமூர்த்தி பல்லக்கில் கோவிலின் பிரகாரத்திலுள்ள கொன்றை மரத்தடியில் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், விவசாய சங்க தலைவர் வடக்கு தொப்புதுரை, உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News